Top Module Empty
முகப்பு arrow எம்மைப்பற்றி
எம்மைப்பற்றி PDF Print E-mail
தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எம்மத்தியில் குறிப்பாக புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் மத்தியில் தனது முழமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆனால் 2000ம் ஆண்டுக்கு பின் இன்நிலையில் மாற்றம் நிகழக் கூடியவகையில் தமிழீழத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் திரைப்படங்களை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் இந்தியத் திரைப்படங்களுடன் போட்டிபோடமுடியாத நிலையிருந்தாலும் வாழ்வியல் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் திரைப்படங்களாக இவை உருவாக்கப்படுகின்றன. இன்நிலையில்தான் NT picture தனது பணியை சித்திரை மாதம் 2003ம் ஆண்டு ஆரம்பித்தது.

துருபனதும் ஸ் ரீபனதும் முயற்சியில் 03.04.2003ல் NT picture ஒரு திரைப்படத்தயாரிப்பு நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் ஆரம்பப் பணிகளில் உதவியவர்களில் K.சுந்தர், ரட்ணா, சேகர் ஆகியவர்களை குறிப்பிடலாம். NT pictures தனது முதல் பணியை 27.04.2003ல் நல்லதோர் விணை செய்தே என்ற குறுந்திரைப்படம் முலம் தெடங்கியது. 21நிமிடங்களே பேசக் கூடிய. இத்திரைப்படம் மிகக்குறுகியகாலத்திற்குள் தயாரிக்கப்பட்டது எனினும் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்று ஒரு வெற்றிப்படம் என்ற நிலைக்கு வந்தது. இது அதன் இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் மேலும் திரைப்படங்களை உருவாக்கும் உற்சாகத்தை அளித்ததெனலாம்.

அதைத்தொடர்ந்து NT picture தனது அடுத்த தயாரிப்பாக ஆடிமாதம் 2003ல் பயணங்கள்என்னும் குறுந்திரைப்படத்தையும் தயாரித்தது. 14நிமிடங்களே பேசக்குடிய இத்திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களின் வாழ்வியல் யதார்த்தஙகளை பேசும் படமாக அமைந்தது.

இரு குறும்படங்களும் தந்த வெற்றியில் NT picture தனது அடுத்த தயாரிப்பாக ஒரு முழுநீளத்திரைப்படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது ஆனால் இப்பணி சுலபமானதாகஅமையவில்லை குறும்படங்களுக்கும் முழுநீளத்திரைப்படத்திற்கும் உள்ள இடைவெளி பயமுறுத்துவதாகவே இருந்தது.

தொப்புள்கொடி என்று பெயரிட்டு புரட்டாதி மாதம் 2003ல் தொடங்கிய தயாரிப்பு தை மாதம்2004ல் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து இத்திரைப்படங்களை தமிழ் மக்களின் பார்வைக்காக Oslo திரையரங்கு ஒன்றில் திரையிட்டால் என்ன எண்ணம் தோன்றியது கூடவே இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது இறுதியில் இது சாத்தியம்தான் எனும் வகையில்நோர்வேயில் முதல் முறையாக நோர்வேயில் தயாரிக்கப்பட்ட ஓரு தமிழ்த்திரைப்படம் Oslo திரையரங்கு ஒன்றில் 14.02.04 அன்று திரையிடப்பட்டது.

நல்லதோர் வீணை செய்தே பயணங்கள் ஆகிய குறும்படங்களுடன் தொப்புள்கொடி எனும் முழுநீளத் திரைப்படமும் 14.02.04 சனி 15.02.04  ஞாயிறு என இரு நாட்கள் திரையிடப்பட்டதுஇத்திரைப்படங்கள் Osloவில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றதைத் தொடர்ந்து நோர்வேயின் பிற நகரங்களிலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும்திரையிடப்பட்டு அங்கும் வெற்றிபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படங்கள் தமிழ் மக்களிடையே NT picture பற்றிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் இந்த எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்யக்கூடிய வகையில்தமது அடுத்த தயாரிப்புக்களை படைக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் NT picture க்கு ஏற்பட்டிருக்கிறது அந்த வகையில் கலைத்துறையில் ஆர்வமுள்ள அனைத்து துறை சார்ந்தகலைஞர்களையும் உள்வாங்கி தனது பயணத்தில் தொடர்ந்தும் பயணித்துக்கொணடிருக்கிறது.

NT picture

 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்