Top Module Empty
கவிதை வெளியீடு PDF Print E-mail

Image அறிந்ததில் புரிந்தவை கவிதை வெளியீடு 25.10.09 ஞாயிற்றுக்கிழமை Grorud Samfunnshus மண்டபத்தில் நடைபெற்றது ஆரியன் என்ற இருபது வயதுடைய இந்த இழைஞனின் எண்ணங்கள் இங்கு கவிதையாக வெளியிடப்பட்டது ஒருமணிநேரம் நடந்த நிகழ்ச்சியில் ஆரியனின் குரலில் ஒரு நிழற்படவீடியோவில்

கவிதை வாசிக்கப்பட்டது அது எல்லோருடைய மனதிலும் பதியவைத்தது அவரின் கற்பனை, ஒரு மனிதனின் அனுபவத்தின் கற்பனையே கவிதை அவரின் அனுபவக்கவிதை ஒன்று

கம்பியூட்டருக்கு பட்டை போட்டு
நடுவிலே ஒரு பொட்டு வைத்து
எலுமிச்சை வேறு தொங்கவிட்டு - இறுதியில்
கரண்டை தொடுக்கிறான் மடையன்...

காருக்கு சால்வை போட்டு
கமறாவுக்கு மாலை போட்டு
கற்பூரம் காட்டிக்கொண்டு...
கண்ணை மூடுகின்றான்...
தொழில் மீது இல்லாத நம்பிக்கை
தொழுதலில் ஏன் வந்தது உனக்கு...

கழுதைக்கு திருமணமாம்...
குழந்தைக்கு கைகலப்பாம்...
கடவுளுக்கு உணவாம்...
கல்லுக்கு பாலாம்...
பெண்சிசுவுக்கு கள்ளிப்பாலாம்...

வள்ளுவர் கூற்று மண்ணுள்...
பாரதி கூற்று மண்ணுள்...
பெரியார் கூற்று நிலைக்கலையேல்...
என் கூற்றா நிலைக்கும்...

நீங்கள் திருந்தமாட்டீர்
என்னை திருத்திக்கொள்கின்றேன்...;

Image

Image

Image

 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்