Top Module Empty
குரலிசை அரங்கேற்றம் PDF Print E-mail
Image மூத்தகலைஞர் திருமதி மல்லிகா குணபூஷனம் நாகராசா அவர்களின் நல்லைமுருகன் இசைத்தமிழ்மன்றத்தினால் செல்வி ரஜித்தா சத்தியரூபனின் குரலிசை அரங்கேற்றம் 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை Lillesteøm Kultursenter  மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது நோர்வேயின் முன்னணிக் கலைஞர்களைக் காணக்கூடியதா இருந்தது

நடனஆசிரியர்கள் முன்வரிசையில் இருந்து தாளம்போட்டது குறிப்பிடத்தக்கது அரங்கேற்றத்தில் முதலில் விருத்தம் இது தாளம் இல்லாது பாடப்படடும் பாடல் அதில் வரிசையாக மாதா பிதா குரு என்றும் ”தாயமண்ணுக்காய் உயிர்நீத்த தெய்வங்களுக்கு வணக்கம் என்றும் பாடப்பட்டது எல்லோர் மனதின் ஆழம்பார்த்ததுவிட்டது. தெடர்ந்து வர்ணம் இரண்டு காலத்தில் ஆரம்பித்து பஞ்சதந்திரம் கீர்த்தனை பாடிய விதம் செல்வி ரஜித்தா சத்தியரூபனின் சங்கீத ஆழுமையை காட்டியது. தெடந்து பல்லவிவரை களைகட்டிவிட்டது அரங்கேற்றம். சிறப்பு விருந்தினர் திரு.உமைபாலன் பேசுகையில் தாய்மொழியில் மட்டுமல்லாது பிறமொழிப் பாடலையும் குருவைப்போலவே உச்சரிப்பில் சுத்தமாகப் பாடுகிறார் என்றார்

இவற்றுக்கெல்லாம் ஈடாக அறிவிப்பாளர் கார்மேகம் நந்தாவின் அறிவிப்பு! இவர் எந்த மேடையிலும் அந்த நிகழ்ச்சி சம்மந்தமான கடந்தகால நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி யார், யாருக்குப்பின் யார், எந்த ஆண்டு போன்ற பல விடையங்களை ஒப்பிட்டு அறிவிப்பது வழமை இங்கும் அதைத்தவறவில்லை.

Image

Image

Image

Image

Image

Image

 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்