Top Module Empty
அரங்கப்பிரவேசம். PDF Print E-mail

Image நர்த்தன காவியா நடனக்கல்லூரியால் நடாத்தப்பட்ட 22 மாணவர்களின் அரங்கப்பிரவேசம் 02.01.2010 சனிக்கிழமை  Sentrum scene மண்டபத்தில் நடைபெற்றது இங்கு 22 மாணவர்கள் வரிசை வளையாது நடனமாடியதும், நேரம்தவறாது நடனமாடியதும் பெருமைப்படவேண்டிய விடையம்தான் குறிப்பாக ”சிவனே ஈழமக்களைக் காப்பாற்று”

என்ற பாடல் இசைக்கலைமணி யாழ் வாசுகி ரங்கன் அவர்களால் எழுதி இசையமைக்கப்ட்ட வர்ணம் சலிப்பில்லாது அடுத்து என்னவரப்போகிறது என்ற ஆவலைத்து}ண்டியது கலையரசி கல்யாணி தயாபரனின் நடன அமைப்பும் பாடல் வரிகளும். மேடையில் பக்கவாத்தியக் கலைஞர்களில் எழில் இசைவேந்தன். மதுரக்குரலோன் திரு. எஸ்.கண்ணன் அவர்களைத்தவிர ஏனையவர்கள் நோர்வே நாட்டுக் கலைஞர்களே காணப்பட்டனர் அண்மையில் அரங்கேறிய இசைச்சுடர் கலாஜோதி, கானவிநோதன், திரு. அச்சுதன் கெளரிதாசன் இசைக்கலாஜோதி அபிராமி கஜேந்திரன் மிருதங்கவித்துவான். பல்கலைவேந்தன் திரு. சுந்தரமூர்த்தி கணேசன் வயலின்; வித்துவான் திரு. விநாயகமுர்த்தி வேலாயுதம் ஆகியோர் காணப்பட்டனர்

பல அரங்கேற்ற நிகழ்வின்போது எம்கலைஞர்கள் கானப்படுவதில்லை இதற்கு பலரிடம் இருந்து வந்த பதில் எம்கலைஞர்கள் பயிற்சிகளின் போது  நேரத்திற்கு வருவதுகிடையாது இடையில் அவர்தம் வேலைகள் பார்கச்சென்று வருவார்கள் என்று. நான் கல்யாணி தயாபரனிடம் கேட்டோன்? ஏம்கலைஞர்களால் எதுவிதடங்கலும் இல்லை என மறுத்துவிட்டார் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு மேடைகொடுங்கள் என்று பலதடவைகள் எழுதியிருந்தீர்கள் அதைத்தான் நான் செய்துள்ளேன் என்றார். ஆரங்கேற்றம் சரியான நேரத்தில் ஆரம்பித்தது இடைவேளைவரை இடைவெளியின்றி நடைபெற்றது பட்டமளிப்பைத் தொடர்ந்து பிரதமவிருந்தினர் ஆவலர்கள் மேடையேறி நேரத்தை இளுத்துவிட்டார்கள் குறிப்பாக பெற்றேர் சார்பாக போசியவர் அதிகநேரத்தைப் பாவித்துவிட்டார் அரங்கேற்ற நிகழ்வுகளில் இப்படியான பேச்சுக்கள் தேவையா?

மேடை அமைப்பு ஆடம்பரமில்லாது காணப்பட்டது வர்ணவிளக்குகள் ஒளியூட்டிய விதம் நன்றாகவும். ஓலியமைப்பு வெகுசிறப்பாவும் மிருதங்கத்தின் இசையை முழமையாக கோட்கக்கூடியதாக இருந்தது அறிவிப்பாளர் கார்மேகம் நந்தா கூறுகையில் ஒரு சில இடங்களில் இப்படியான அரங்கேற்றம் நடைபெற்றாலும் இது புலம்பெயர் சூழலில் வாழும் எமக்கு பெருமை சேர்க்கும்விடையம் எனக்கூறினார் 22.20 மணிக்கு மங்களத்துடன் இனிதே நிறைவுற்றது.

விமர்சனம் 01

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்