|
|
|
கலையரசு க. சோர்ணலிங்கம் அவர்களாள் எழுதப்பட்ட ”ஈழத்தில் நாடகமும் நானும்” என்னும் நூல் 13.12.2009 அன்று மாலை 18.00 மணிக்கு Veitvet senter மண்டபத்தில் நூல் கெளரவிப்பு நடைபெற்றது இந்நிகழ்வை நோர்வே தமிழ் பிச்சர் (nt picture) நடத்தியது ஈழவர் திரைக்ககலை மண்றத் தலைவர் பரீஸ்ரர் எஸ். ஜே ஜோசெப் அவர்களும் சலங்கை நர்த்தனா இயக்குனர் திருமதி மேசி சூசை அவர்களும்
கெளரவித்து உரையாற்றினார்கள் இந்நூல் 1968 ம் ஆண்டு வெளியிடப்பட்டது இதில் அனுபவங்களும் எதிர்கால சந்ததியினருக்கு ஆலோசனைகளும் எழுதப்பட்டுள்ளன இந்நூலை ”ஈழவர் திரைக்கலை மன்றம்” 2008 ம் ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளது திருமதி மேசி சூசை பேசுகையில் எம்மில் பல கலைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பது நல்லது நாம்வெளிப்படையாக ஏற்காவிட்டாலும் நாம்விடும் பல தவறுகளுக்கு அவர் அன்றே அனுபவித்து எழுதிவிட்டுச் சென்றுள்ளார் எஸ். ஜே ஜோசெப் இவரின் மாணாக்கர்களில் ஒருவர் இவர்பேசுகையில் கலையரசு க. சோர்ணலிங்கம் போல் நடித்தும்காட்டினார் இறுதியாக அங்கு புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்புத் தொகையை ஈழவர் திரைக்கலை மன்றத்தின் வளர்ச்சிக்கு வளங்கப்பட்டது. 





 |
|
|