|
|
|
கவிதை நூல் : ”என் ஏதேன் தோட்டம்” ”தொட்டிப்பூ” ஒலி ஒளித் தொகுப்பு: "நின்னையே ரதியென்று..." 14.03.2010 அன்று Grorud samfunnshus ல் மாலை 5:45 மணிக்கு வெளியிடப்படது. கலை இலக்கிய ஆர்வலர்கள் சமூமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பத்திரகை ஆசிரியர் திருமதி ஜெயசிறி பேசுகையில் நாற்று மேடைக்கு அரிவாளுடன் போகக்கூடாது என்றும் நான் அதற்கு தயார் இல்லை என்றும் கூறினார் அதைத்தொடர்ந்து திரு உமைபாலன் பேசுகையில் இது நாற்று மேடை அல்ல முற்ரிய கதிர்களைக்கொண்ட படைப்புக்கள்தான் இவை நான் இங்கு அரிவாளுடன் தான் வந்துள்ளேன் என்று கூறி தனது விமர்சனத்தைத் தொடங்கினார். பெரும்பாண்மையான ஆண் கவிஞர்கள்தான் பெண்களையும் பெண்மையையும் பற்றி கவிபாடியுள்ளனர் ஆனால் பெண்களின் உள்ளக்கனவுகளை பெண்களால்தான் கவிதை வடிக்க முடியும் அந்தவரிசையில் கவிதா ரவிக்குமார் எழுதிய கவிதைகள் வாசித்துப் பாராட்டக் கூடியவைகளாகத்தான் உள்ளன 








 |
|
|