Top Module Empty
வன்னிஎலி PDF Print E-mail

Image சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு "வன்னிஎலி"

தமிழியம் தயாரிப்பில் உருவான “வன்னிஎலி” குறும்படம் பங்களாதேஸ் தலைநகர் டாகாவில் நடைபெற்ற 11 வது சர்வதேச குறும்பட மற்றும் சுதந்திரஊடகத்திற்கான திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

ஈழத்தமிழர்களின் திரைப்படம் ஒன்று சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு பெறுவது இதுவே முதற் தடவை என ஈழவர் திரைக்கலை மன்ற தலைவர் திரு யோசெப் செல்லப்பா அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இத்திரைப்படம் நோர்வே மண்ணில் வளர்ந்து வரும் ஒரு  திரைப்படக் கலைஞரிடம் ("தமிழியம்" சுபாஸ்) இருந்து வெளிவந்ததென்பது நோர்வே தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.


இக்குறும்படமானது கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெரியார் குறும்படவிழாவில் சிறப்புப்பரிசையும், இவ்வருடம் நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்படவிழாவில் சிறப்புப்பரிசையும் பெற்றது மட்டுமல்லாமல் Vibgyorfilm festival 2010 ல் “இவ்வருடப்பார்வை தெற்காசியா” எனும் பிரிவிலும், The European Independent Film Festival 2010 ல் ஐரோப்பிய குறும்படப்பிரிவிலும் தெரிவாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர தற்பொழுது மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் “10 நிமிடக்கதைகள்” எனும் குறும்படபோட்டி நிகழ்விலும் கலந்துகொண்டு மக்களினதும் , இயக்குனர்களினதும் பாராட்டை பெற்றுள்ளது.

 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்